தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
2009 ஆம் ஆண்டு முதல் போராடிவரும் ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதாக கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கை 311-ல் கூறியுள்ளபடி சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த பத்து நாட்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.
அதன்படி போராட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரசு செவி சாய்க்காததை தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட இடைநிலை பதிவு மூப்புஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர் அதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..






















