நடப்பாண்டிற்கான உயர் கல்விக்கடன் வழங்கிடக்கோரியும், கொரோனா பேரிடரால் பொருளாதார சிக்கல்களில் தவிக்கும் மக்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்ட கல்விக்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முன் தஞ்சாவூர் காவேரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பார்ட்டம் நடைப்பெற்றது.
கும்பகோணம், அக். 19 –
தகுதியான விவசாயிகளின் வீட்டு குழந்தைகளுக்கும், ஏழை எளியயோரின் வீட்டு குழந்தைகளும், உயர் கல்வி கற்க, நடப்பாண்டிற்காண கல்விக் கடனை உடனடியாக வழங்கிட கோரியும், இரு ஆண்டுகளாக கொரோனா கோரப்பிடியில் சிக்கி உலகமே சிக்கி தவித்து வரும் நிலையில் பெற்றோரின் நிலை அறிந்து கல்விக்கடனை தள்ளுபடி செய்திட கோரியும் கும்பகோணம் காந்தி பூங்கா எதிரில் உள்ள ஐஓபி கிளை முன்பு, ஏராளமான விவசாயிகள் வீட்டு குழந்தைகள், கைகளில் பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் படங்களை வைத்துக் கொண்டு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை வங்கிகள், தகுதியான ஏழை எளியோர் மற்றும் விவசாயிகளின் வீட்டுக் குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவிடும் வகையில், கல்விக்கடன் வழங்காமல் அலைகழிக்கப் படுகிறார்கள், இதனை கண்டித்தும், நடப்பாண்டிற்காண கல்விக் கடனை உடனடியாக வழங்கிட வலியுறுத்தியும், கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கோரப்பிடியில் உலகமே சிக்கி தவித்து வந்த நிலையில் ஏழை எளியோர், விவசாயிகளின் வீட்டுக் குழந்தைகள் வருவாய் இன்றி, வேலைவாய்ப்பின்றி குடும்பம் நடத்தவே தவித்த நிலையில், அப்போதைய கால கல்விக் கடனை தள்ளுப்படி செய்திட வேண்டும் என வலியுறுத்தியும், நேற்று கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை முன்பு, செம்மங்குடி சின்னத்துரை ஒருங்கிணைக்க, விவசாயிகள் வீட்டுக் பிள்ளைகளான யாழினி ஆதிசிவம் தலைமை ஏற்க, சுபா ரவிச்சந்திரன், சசிவதனி ராமச்சந்திரன் மற்றும் திவ்யா மாரியப்பன் ஆகியோர் முன்னிலையில், கரங்களில் பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் படங்களை ஏந்தியபடி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பேட்டி : சுந்தரவிமல்நாதன், செயலாளர்,
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்