தஞ்சாவூர், ஏப். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கிருபா பொன்பாண்டியன் (34), இவர் தனது நண்பருடன் சேர்ந்து திருச்சியில் இருந்து தஞ்சைக்கு காரில் வந்துள்ளார்.

காரை கிருபா.பொன் பாண்டியன் ஒட்டி வந்து உள்ளார் திருமலை சமுத்திரம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு சுவரில் மோதி வலது புற சாலையில் திரும்பி. தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி மீன் ஏற்றி  சென்ற சரக்கு வாகனம் மீது மோதியது.

இதில் கார் ஓட்டி சென்ற ஆசிரியர் கிருபா பொன் பாண்டியன், சரக்கு வாகன ஓட்டுனர் நெடுஞ்செழியன் ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்

படுகாயம் அடைந்த பொள் பாண்டியன் நண்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வல்லம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here