ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 20 வது ஆண்டு விழா மற்றும் லீக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன்  தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்  மகேந்திரன் வரவேற்றார். கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் மாரீஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். 2017-18, 2018 -19 லீக் போட்டிகள் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், ஜெயமுத்துராமலிங்கம் அறிக்கை வாசித்தனர். 2017-18 லீக் ஆட்டங்களில் டிவிஷன் 1ல் முதலிடம்  மாஸ்டர் தண்டர் , 2 ம் இடம்  ரெயின்போ , டிவிஷன் 2ல் முதலிடம்  நியூ இளம்புயல், 2ம் இடம்  நியூ ஸ்டார் அணிகள்,
2018 -19
லீக் ஆட்டங்களில் டிவிஷன் 1ல் முதலிடம் ஏ ஆர் எஸ், 2ம் இடம் நேதாஜி, டிவிஷன் 2ல் முதலிடம் எம்எம்பி, 2 ம் இடம் கலைப்புலி அணிகளுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் பரிசு கேடயங்கள், கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கினார். செயற்குழு உறுப்பினர் அப்பாஸ் அலி நன்றி கூறினார். கிரிக்கெட் அசோசியேஷன் உப தலைவர்கள் அண்ணா துரை, பாலசங்கர், செயற்குழு உறுப்பினர் கண்ணதாசன் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நெல்லையில் நாளை (ஆக. 11), திண்டுக்கல்லில் (ஆக., 13) அரை இறுதி ஆட்டங்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் (ஆக., 15) இறுதி ஆட்டம்  நடைபெற உள்ளன. லீக் ஆட்டங்களில் பங்கேற்க கிராமப்புற வீரர்களுக்கு நல்ல வாய்ப்பளிக்கப் படுகிறது.  ஆட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள் படிப்படியாக முன்னேறி தமிழ்நாடு ரஞ்சி டிராபி, ஐபிஎல்., போட்டிகளில் விளையாடலாம். ராமநாதபுரத்தில் உள்ள  கிரிக்கெட் மைதானத்தின் தரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் வழிகாட்டுதல் படி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here