ராமநாதபுரம், செப். 16- தமிழகத்தில் விவசாயிகளுக்கு கடந்த 2011 ஆண்டு முதல் நடப்பு வரையிலான 2019 வரை எட்டு ஆண்டுகளில் வட்டில்லா கடனாக கூட்டுறவு துறையின் மூலம் ரூ. 44 ஆயிரம் கோடி வழங்கப் பட்டுள்ளது. என ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுாரில் கூட்டுறவு துறையின் சார்பாக 14 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பாங் காடிகள், புதிய கட்டடங்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லுார் ராஜூ திறந்து வைத்து பேசினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுாரில் கூட்டுறவு துறையின் சார்பாக 14 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பாங் காடிகள், புதிய கட்டடங்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லுார் ராஜூ திறந்து வைத்து பேசினார். விழாவில் 939 பயனாளிகளுக்கு ரூ.10.58 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் கோவிந்தராஜ் திட்ட விளக்கவுரை ஆற்றினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் ராஜூ பேசியதாவது: இதயதெய்வம் புரட்சிதலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்கள் நலனுக்காக விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், அம்மா மருந்தகம், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி, பயிர்க்கடன் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் மூலமாக பொது மக்கள் தங்களுக்கு தேவையான பருப்பு, எண்ணெய், மசாலா, அரிசி, சோப்பு உள்ளிட்ட 300 வகையான பொருட்களை 5 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் மொத்தம் 103 அம்சமாக சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சர் சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் இத் திட்டத்தை மேலும் விரிவுப் படுத்தும் விதமாக கூடுதலாக 582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் ரூ.5.82 கோடி மதிப்பீட்டில் தொடங்கப் படும் என்று அறிவித்தார்கள். அதனடிப் படையில் இது வரை 81 புதிய அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் திறக்கப் பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 3 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இன்றைய தினம் 18 சிறப்பு அங்காடிகள் என ராமநாதபுரம் மாவட்டத்தில் திறந்து வைக்கப் பட்டுள்ளன. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் 123 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல் பட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக வட்டியில்லா பயிர்கடன் வழங்கப் படுகிறது. தமிழகத்தில் இத் திட்டத்தின் கீழ் கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை 84 லட்சத்து 69 ஆயிரத்து 310 பயனாளிகளுக்கு ரூ. 44 ஆயிரத்து 68 கோடி மதி்பபில் கடனுதவிகள் வழங்கப் பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 908 பயனாளிகளுக்கு ரூ.441.82 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப் பட்டுள்ளன. அதேபோல் மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக 22 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இவ் வங்கிகள் மலம் 2019-20ம் ஆண்டில் மொத்தம் 3 ஆயிரத்து 176 பயனாளிகளுக்கு ரூ.ஆயிரத்து 436 லட்சம் மதிப்பில் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப் பட்டுள்ளன, இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிராபகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முனியசாமி, பரமக்குடி வேளாண் விளை பொருள் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜமால், ராமநாதபரம் மண்டல இணை பதிவாளர் முருகேசன், கூட்டுறவு சங்க துணை பதிவாளர்கள் கணேசன், கோவிந்தராஜ், லட்சமணக் குமார், வெங்கடாசலபதி உட்பட பலர் பங்கேற்றனர்.