இந்தியன் வங்கி மத்திய விளையாட்டு குழு சார்பில் இந்தியன் வங்கி கோப்பைக்கான மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 3-வது மாநில அளவிலான ஆக்கி போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. வருகிற 6-ந்தேதி வரை இந்தப்போட்டிகள் நடக்கிறது.

இதில் நடப்பு சாம்பியன் ஐ.சி.எப், 2-வது இடத்தை பிடித்த தெற்கு ரெயில்வே, இந்தியன் வங்கி, ஐ.ஒ.பி., வருமானவரி, தமிழ்நாடு போலீஸ், சென்னை நகர போலீஸ், இந்தியன் விளையாட்டு ஆணையம் உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றன.

‘லீக்’ மற்றும் ‘நாக்அவுட்’ முறையில் இந்தப்போட்டி நடக்கிறது.

சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு இந்தியன் வங்கி கோப்பையுடன் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். இதுதவிர சிறந்த வீரர்களுக்கும் பரிசு தொகை வழங்கப்படும்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை இந்தியன் வங்கி மத்திய விளையாட்டு கமிட்டி தலைவர் எம்.நாகராஜன், செயலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here