இராசிபுரம், ஆக. 12 –
முள்ளுக்குறிச்சி பகுதியில் தொடர் குட்கா விற்பனையில் ஈடுப்பட்டு வந்த சதீஸ்குமார் என்பவர் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முள்ளுகுறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் சதீஷ்குமார் (34.) இவர் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா எனும் போதை பொருட்களை சப்ளை செய்தற்காகவும், மேலும் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்க்காக பலமுறை கைது செய்யப்பட்டார்.
தமிழக முதல்வர் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதிற்கிணங்க தற்போது நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் குண்டாஸ் வழக்கு பதிய ஆணை பிறப்பித்தார்.
ஆயில்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்ட சதீஷ்குமார் தற்போது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.