ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரண்மனையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றம் சார்பில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்றத்தின் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். பின் படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார், துணை தலைவர்கள் வசந்தகுமார், சசிகண்ணன், பிரதீப்பழனிவேல், துணை செயலாளர்கள் ராம்குமார், கார்த்திக் பாண்டியன், மோகன், துணை பொருளாளர்கள் அர்ஜூன், பிரீத்திவி தென்னரசு, செந்தில், நகர் அமைப்பாளர் செந்தில்குமார், முருகன், மணிகண்டன், கார்த்திக், அம்ஜத்கான் உட்பட பலர் பங்கேற்றனர்.