பட்டுக்கோட்டை, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என ஒரு சில பள்ளிகள் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்ற அரசு உத்தரவை மீறி ஒரு சில பள்ளிகள் தற்போது மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட ஐம்பது கிலோமீட்டர் தாண்டி வருகின்ற பள்ளி மாணவ மாணவியர்கள் தினந்தோறும் 6 மணிக்கு புறப்பட்டு பள்ளிக்கு வர வேண்டி உள்ளது. அத்தோடு வெயிலின் தாக்கம் பட்டுக்கோட்டை பகுதியில் அதிகமாக காணப்படுவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் உடல் சோர்வு ஏற்பட்டு மன ரீதியாகவும் பாதிப்படைந்து வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே அரசு உத்தரவை மீறி தற்போது பள்ளியை திறந்து பாடம் நடத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.




















