பஜாஜ் நிறுவனத்தின் புதிய மாடல் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்
திருவண்ணாமலை ஜூலை.18- உலகம் முழுவதும் நற்பெயரை பெற்றுள்ள பஜாஜ் மோட்டார் சைக்கிள் நிறுவனம் உயர்ந்த தரம் மற்றும் உயந்த தொழில் நுட்பத்துடன் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வருகிறது.
அந்த வகையில் சிடி 110 எக்ஸ், என்எஸ் 125 மோட்டார் சைக்கிள்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பான ஸ்டைலிங்கோடு வந்துள்ள...
செய்யாறில் அதிகபட்சம் 78 மி.மீ. மழை பதிவு
திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. செய்யாறு கலசபாக்கம் ஆரணி சேத்துப்பட்டு போளூர் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது....
காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று திரும்பிய விவசாயி மின்வேலியில் சிக்கி பலி?
திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்குள்ள செய்யாற்றின் கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தி வந்த 2 மாட்டுவண்டிகளை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் போளூர் வட்டம் வம்லூர் கிராமத்தைச்...
கலசபாக்கம் தாசில்தாராக ஜெகதீசன் பொறுப்பேற்பு
கலசபாக்கம் ஜூலை.18- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாசில்தாராக ஜெகதீசன் பொறுப்பேற்றுக் கொண்டார். கலசபாக்கம் தாசில்தாராக பணியாற்றி வந்த கே.அமுல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் அகதிகள் நலன் தனிதாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஜெகதீசன் கலசபாக்கம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிய...
வள்ளிவாகை ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி
திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை ஊராட்சியில் வேடியப்பன் மலையடிவாரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் நியாயவிலைக் கடை கட்டிட கட்டுமானப்பணி, வேடந்தவாடி ஊராட்சியில்...
ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் கோவில் கல்வெட்டு – அமைச்சர் எ.வ.வேலு திறந்துவைத்தார்
திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டியில் 2ஆயிரம் வருடத்திற்கு முற்பட்ட ஜம்புலிங்கேஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு கோவில் கல்வெட்டை திறந்துவைத்தார்.
திருவண்ணாமலை வட்டம் காட்டாம்பூண்டி கிராமத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு வயல்வெளியில் மண்ணுக்குள்...
தி.மலை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் – மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை ஜூலை.15, திருவண்ணாமலை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 39 வார்டுகளிலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப் படுத்துவதற்காக நடவடிக்கைகளை...
திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு
திருவண்ணாமலை ஜூலை-15, திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக ஆ.சந்திரா பொறுப்பேற்றுக்கொண்டார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி கும்பகோணத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிவந்த ஆ.சந்திரா திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் புதிய...
மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் மனு!
திருவண்ணாமலை ஜூலை-15- நிலத்தை தனது பெயருக்கு நயவஞ்சகமாக எழுதி வாங்கிக்கொண்ட மகன் தனக்கு சாப்பாடு போடாமல் அடித்து உதைத்ததாகவும் எனவே அவர் மீது மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் மனு அளித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்...
திருவண்ணாமலையில் விதைப்பண்ணை தொடர்பான விவரம் குறித்து ஆய்வு
திருவண்ணாமலை ஜூலை-15- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல் செங்கத்தில் 1971ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பண்ணை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விவசாய பண்ணைகளில் இதுவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் 10 ஆண்டுகள் நட்டத்தில் இயங்கிய இந்த...













