திருவண்ணாமலை ஜூலை-15, திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக ஆ.சந்திரா பொறுப்பேற்றுக்கொண்டார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி கும்பகோணத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிவந்த ஆ.சந்திரா திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் புதிய ஆணையாளராக ஆ.சந்திரா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு நகராட்சி அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து புதிய நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆ.சந்திரா மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.