ராமநாதபுரம், மே 12-

ராமநாதபுரத்தில் ரேமா சர்ச் புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழா நடந்தது. ராமநாதபுரம் கீழக்கரை சாலை கழுங்கு செக்போஸ்ட் அருகில் கட்டப்பட்டுள்ள ரேமா சர்ச் புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழா நடந்தது. ஆலயத்தை பிரதிஷ்டை செய்து அப்போஸ்தலர் எம்.ஜான் ராஜ் தேவ நற்செய்தி வழங்கினார். போதகர் சாமுவேல் சர்ச்சில் (சென்னை), போதகர் பாஸ்டர் ஏசையா, ஜான் டேனியல், மண்டபம் முகாம் சி எஸ் ஐ., போதகர் சந்தானம் ஏசுவடியான், ராமேஸ்வரம் தேவ சபை நிர்வாகி அந்தோணி மற்றும் ரேமா சர்ச் ஊழியர்கள் உள்பட பலர் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து புதிய ஜெபவீடு விழாவிற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது. புதிய ஜெபவீடு பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம், தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம், ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, திருவாடானை உட்பட பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்பவர்களை அழைத்து செல்வதற்காக விழா கமிட்டி சார்பில் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து புதிய ஜெபவீடு ஆலயம் வரை வாகன வசதி செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here