திருவண்ணாமலை, டிச. 4 –
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தென்னக ரயில்வே சார்பில் நாளை 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி நாளை 5 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு சென்னை கடற்கரையில் ரயில்வே நேரப்படி 18 மணிக்கு புறப்படும் ரயில் 00.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். தொடர்ந்து திருவண்ணாமலையில் 3.45 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரையை 9.05 மணிக்கு சென்றடையும். அதன்படி சுழற்சி முறையில் வேலூர், கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணிசாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இதேபோல் நாளை (5ம் தேதி) முதல் 8ம் தேதி வரை 4 நாட்களுக்கு புதுச்சேரியில் 19.45 மணிக்கு புறப்படும் ரயில் திருவண்ணாமலையை 22.30 மணிக்கு சென்றடையும். தொடர்ந்து திருவண்ணாமலையில் 3.30 மணிக்கு புறப்பட்டு 6.20க்கு மீண்டும் புதுச்சேரி சென்றடையும். இதன் மூலம் விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, ஆயத்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக6சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மேலும் 6, 7ம் தேதிகளில் 2 நாட்களுக்கு மயிலாடுதுறையில் இருந்து 6 மணிக்கு புறப்படும் ரயில் 10.55 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். பின்னர் அந்த ரயில் 12.40க்கு புறப்பட்டு 17.40க்கு மீண்டும் மயிலாடுதுறை செல்லும். இதனால் விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, ஆயத்தூர், திருக்கோவிலூர், ஆத்ச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இதேபோல் 6,7ம் தேதிகளில் திருச்சிராப்பள்ளியில் இருந்து 15.45 மணிக்கு புறப்படும் ரயில், 00.40 மணிக்கு வேலூர் சென்றடையும், அங்கிருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு 10.45 மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும். அதன்படி திருப்பாத்திரி புலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சென்னை தாம்பரத்தில் இருந்து 6, 7ம் தேதிகளில் 2 நாட்களுக்கு 8.40 மணிக்கு புறப்படும் ரயில் 12.15 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். மீண்டும் அந்த ரயில் 13.45 மணிக்கு புறப்பட்டு, 17.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதன்படி செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருத்வத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் திருவண்ணாமலை தீபவிழாவுக்கு இயக்கப்படுவதால் பொதுமக்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் ரயில்கள் இயக்கப்படும் நேரத்துக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.