கும்பகோணம், டிச. 20 –

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 13,14,15, ஆகிய மூன்று வார்டுகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்’ என்ற சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. அதில் அம்மூன்று வார்டுகளில் இருந்து வந்திருந்த மக்கள் 100 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த துறைச் சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்கள்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “மக்களுடன் முதல்வர்” என்ற புதியத் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார்.

அத்திட்டத்தின் நோக்கமாக தமிழ்நாடு தெரிவித்துள்ள அறிக்கையில் அரசின் சேவைகள் மக்களுக்கு உடனடியாகவும் விரைவாகவும் கிடைத்திடும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

மேலும் அச்சிறப்பு திட்டமான மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் நடைப்பெறும் முகாமில்  மக்கள் அடிக்கடி அணுகுகின்ற துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கூட்டுறவு துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை, எரிசக்தித் துறை, மின்சாரத்துறை, ஆகிய 13 அரசுத்துறைகள் பங்கேற்கும்.

அம்முகாமில் மக்கள் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கள் அடங்கிய மனுக்களை அவர்களிடம் இருந்து பெற்று இயன்றவரை அம்முகாமிலேயே தகுதியான மனுக்கள் மீதான அம்மனுக்கள் மீது துறைச்சார்ந்த ஆய்வுகளை மேற் கொண்டு உடனடி தீர்வு காண்பதெனவும் நீண்ட ஆய்விற்குட்பட்ட மனுக்களையும் விரைந்து ஆய்வு மேற் கொண்டு மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண்பதே தமிழ்நாடு அரசின் நோக்கமாக கருதப்படுகிறது.

அவ்வகையில் இன்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில், 13,14,15, ஆகிய மூன்று வார்டுகளுக்கான மக்களோடு முதல்வர் என்ற சிறப்பு திட்ட முகாம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மாமன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார், கலந்து கொண்டனர்.  இதில் பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை, மின்சாரத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் அதில் நூற்றுக்கு மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டன. இதில் மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here