இன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216 வது நினைவுத் தினத்தை அரசு, அரசு விழாவாக கொண்டாடியது. அதன் தொடர்பாக சென்னை கிண்டி திரு.வி.க தொழிற் பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் மற்றும் அரசு உயர் அலுவர்கள் பங்கேற்றனர்.
சென்னை, ஆக 3 –
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 216 வது நினைவுச் செய்தி ஒன்றையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அச் செய்திக் குறிப்பில் தீரன் சின்னமலை அவர்கள் தன்னலமற்ற பொதுச் சேவைக்கும், தனிச்சிறப்பான நாட்டுப் பற்றுக்கும் தகுதி மிக்க அடையாளமாகத் அவரது தீரம் திகழ்ந்தது அளப்பரியது, பெருமைக்குறியது என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏழைகளுக்காக வரிப்பணத்தை வழி மறித்துக் கைப்பற்றிய போது சென்னிமலைக்கும், சிவன் மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்தாகச் சொல் என ஆங்கில ஆட்சியாளருக்கு கூறியச் செய்தி அளப்பரியது என்றும் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் எழுச்சி நாயகரான அவருடைய புகழ்பாடும் வகையில், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போதுதான் கிண்டியில் அவருக்கு சிலை வைக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.
கொங்கு வேளார் சமூதாயத்தை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து கொங்குப் பகுதி இளைஞர்கள் கல்வி வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் வாய்ப்புகள் உருவாக்கித் தந்ததும் கலைஞர் அவர்கள்தான், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திமுக பங்கேற்ற போது 31.7.2005 அன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்கு நினைவு அஞ்சல் வெளியிடப் பட்டது.
ஆங்கிலேய அரசுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கி தூக்குக் கயிற்றை முத்தமிடும் நேரத்திலும் சிங்கமென வாழ்ந்த மாவீரன் தீரன் சின்னமலையின் நினைவு நாளில் அவரது வீரத்தையும் தீரத்தையும் நாட்டுப் பற்றையும் நாமும் பெறுவோம் அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உண்மையாக இருப்பதே தீரன் சின்னமலைக்குச் செய்யும் உண்மையான அஞ்சலியாகும் என அந்த நினைவுச் செய்தியில் வெளியிட்டுள்ளார்.
அவரின் மக்களின் வரிப்பணம் மக்களுக்கே பயன்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கை கனவாக்கிடும் வகையில் திமுக வின் அரசு தொடந்து செயலாற்றும் என்ற உறுதியைக்கூறி வாழ்க அவரது புகலென அச் செய்தியில் தெரிவித்துள்ளார்..