உத்திரமேரூர், பிப். 14 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சுற்று வட்டாரப் பகுதியில் இரவு சிற்றூண்டி நிலையம் மற்றும் அதனைத்தொடர்ந்து மூன்று கோவில்களில் அடுத்தடுத்து திருட்டு நடைப்பெற்றுள்ளது. அதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அப்பகுதிகளில் தொடர்ந்து இதுப்போன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனால் தங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் போலீசார் இரவில் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு  சிறிய பெட்டி கடை ஒன்றில் இரவில் நான்கு இளைஞர்கள் உள்ளே சென்று பூட்டை உடைந்து கடையில் உள்ள பொருட்களை திருடிச் செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட அமராவதிபட்டினம் கிராமத்தில் படவேட்டம்மன் கோவில் அருகே முருகன் என்பவர் வீட்டின் முன்பு சாலையோரம் டிபன் மற்றும் சில்லறை வியாபார பொருட்கள் வைத்து கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், முருகன் நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் கடையை மூடி விட்டு வீட்டில் உறங்க சென்றவர் இன்று காலை கடையை திறக்க முற்பட்டபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், கடை உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூபாய் 7000 மற்றும் 4000 மதிப்புள்ள வியாபார பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக உத்திரமேரூர் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலேஸ்வரம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில், விநாயகர் கோவில், அம்மன் கோவில் ஆகிய மூன்று கோவில்களின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அடுத்தடுத்து கோவில் உண்டியல் பூட்டை உடைந்து உண்டியலில் இருந்த சுமார் 3000 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீசார் கோவில் உண்டியல் பூட்டை உடைந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்த பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். போலீசார் இரவில் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குற்ற சம்பவங்களை தடுக்க உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம் ஆகிய இரண்டு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட படூர் கூட்டு சாலையில் காவல் உதவி மையம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமராவதிபட்டினம் கிராமத்தில் தனியார் இரும்பு தொழிற்சாலை முன்பு சிறிய பெட்டி கடை நடந்தும் கஜேந்திரன் என்பவர் கடையின் உள்ளே இரவில் புகுந்த நான்கு மர்ம இளைஞர்கள் கடையின் பூட்டை உடைந்து கடையில் இருந்த பொருட்களை திருடி செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here