திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 25 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கடந்த 16ந் தேதி முதல் செயல்படுகிறது. இந்நிலையில் செய்யாறு அடுத்த வெம்பாக்கம், தூசி, பெருங்கட்டூர் ஆகிய கிராமங்களில் செயல்படும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அவர் நெல்மூட்டைகளை விற்பனை செய்ய இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். இணையதள பகுதியில் முன்பதிவு செய்யப்பட்ட தேதியில் மட்டுமே நெல்மூட்டைகளை விவசாயிகள் கொண்டுவரவேண்டும் என்றார். ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கோபிநாத், செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ், வெம்பாக்கம் தாசில்தார் குமாரவேலு, மண்டல துணை தாசில்தார்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.