குன்றத்தூர், ஏப். 03-

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாஜக அரசின் பெட்ரோல்,  டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மாபெரும் ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைவாசி உயர்வை குறைக்க மத்தியரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரசார் ஸ்கூட்டருக்கு மாலை அணிவித்தும், விறகு அடுப்பில் சமையல் செய்வது போன்றும் நூதன முறையில் மத்திய அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கையில் விளம்பர பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்கவில்லை என்றால் மீண்டும் இது போன்ற போராட்டம் தமிழகமெங்கும் நடக்கும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் வி எல் சி.ரவி தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here