தஞ்சாவூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
நிறவெறியை தூண்டும் விதமாக பேசிய காங்கிரஸ் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் ஜான் பிட்ரோடா கருத்தை கண்டித்து தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக கட்சி சார்பில் தஞ்சை ரயிலடி பகுதியில் நடைபெற்றது.
அந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேர்தல் கட்டுப்பாடு காரணமாக போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, அப்போது காங்கிரஸ் கட்சியை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பப்பட்டது, மேலும் அப்போது மைக் நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது,
பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர், அதில் பாஜக மாவட்ட தலைவர் ஜெய் சதிஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



















