சென்னை ஜூலை 29-
இன்று தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித்துறையின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வு வங்கியால் மும்பையில் உள்ள கோட்டை அலுவலகத்தில் ஆகஸ்ட் 3,2021 அன்று நடத்தப்படுவதாகவும், அப்போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 முதல் 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் ஆகஸ்ட் 3,2021 அன்று சமர்பிக்கப்பட வேண்டும் என அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.