திருவாரூர், டிச. 22 –

திருவாரூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றி பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டம் நிறைவு பெறக்கூடிய தருவாயில் உள்ளதாகவும், அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான இராமகிருஷ்ணன் திருவாரூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டது. திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் அரவை மில் செயல்பாடு குறித்தும், திருவாரூர் அருகே சோழங்கநல்லூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிலையத்தின் கட்டுமான பணிகளின் தரம் குறித்தும், நன்னிலம் வட்டம், ஆண்டிப்பந்தல், மேலவாசல் கிராமத்தில் மீன் குட்டையில் மீன் வளர்ப்பு குறித்தும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான இராமகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர்

தென்னை நாரிலிருந்து உரம் தயாரித்தல், செங்கல் தயாரித்தல், மேலும் தென்னையில் இருந்து வரும் கழிவுப்பொருட்களை உற்பத்தி பொருளாக மாற்றும் சிந்தனை அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் முயற்சியில் திருவாரூர் மாவட்டத்தில் அது செயலாக்கம் பெற்று வருகிறது. எனவும், மேலும் இதற்காக திருவாரூர் மாவட்ட ஆட்சியரை இந்த குழு மனதார பாராட்டுகிறது. எனவும், மேலும் மரங்களுக்கு ஏற்படுகின்ற நோயை கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும் என இந்த குழு பரிந்துரை செய்கிறது என்றவாறு அவர் மேலும்

திருவாரூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றி பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டம் நிறைவு பெறக்கூடிய தருவாயில் உள்ளது. எனவும் மேலும் அத்திட்டம் அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். எனத் தெரிவித்தார்.

மேலும் , தமிழக முதல்வர் ஆட்சி அமைத்த பிறகு 4000 பேருக்கு இலவச  வீட்டு மனைபட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதியன் என்ற பழங்குடியின அமைப்பை சேர்ந்த 300பேர் கண்டறியப்பட்டு அதில் 66 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. 200 நரிக்குறவர் இன மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உண்டான நிலங்களை கண்டறிந்து விரைவில் அவர்களுக்கும் பட்டா அமைத்து தரப்படும். விளிம்பு நிலையில் உள்ள கீழ்த்தட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்து வருவது பாராட்டுக்குரியது என்றார் .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here