திருவிடைமருதூர், பிப். 21 –
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே விடுதலை சிறுத்தை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கம், திருவள்ளுவர் விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எம் எல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நில மோசடி செய்து விவசாயிகளை வஞ்சிக்கும் திருப்பனந்தாள் காசிமடை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மேலும் அவ் ஆர்ப்பாட்டத்தில் கோவில் மடம் நில விவசாயிகளை காப்பாற்று, வீடு இல்லா அனைவருக்கும் குடிமனைபட்ட வழங்கிடு, திருப்பனந்தாள் பேரூராட்சி வேலியன் தோப்பு பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் பட்டியலின மக்களுக்கு குடிமனப்பட்ட வழங்குக, கருப்பூர் ஊராட்சி மணவெளி தெருவில் 60 வருடத்திற்கு மேலாக வசித்து வரும் பட்டியலினத்தை சேர்ந்த 50 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடு, பாப்பாக்குடி அரசடி அண்ணா நகர் அம்பேத்கர் நகர் கோவிந்தபுரம் ஊராட்சி வாணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள மக்களுக்கு குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தியும், கோரிக்கை முழக்கங்கள் எழுப்பியபடி இப்பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைப்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தை கட்சி விவசாய பாதுகாப்பு இயக்கம் மாவட்ட அமைப்பாளர் பாலகுரு தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழருவி கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் அமுதன் துரையரசன் விவசாயி மாநில துணைச் செயலாளர் நாகப்பன் ஒன்றிய செயலாளர்கள் சிவனேசன் முருகப்பன் விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் இளங்கோவன் ஒன்றிய பொருளாளர் வசந்த் நகர செயலாளர் சுரேஷ் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் பிரகாஷ் ஆடுதுறை நகர செயலாளர் ராஜா கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஜீவப்பாரதி மதிமுக ஒன்றிய செயலாளர் பழனி இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றிய தலைவர் பிரதாபன் திருவள்ளூர் விவசாய நல சங்கத் தலைவர் கலைமணி சி பி ஐ எம் ஒன்றிய செயலாளர் கொளஞ்சி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
























