திருவாரூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்…
நவக்கிரகங்களில் நன்மையை தரக்கூடிய, சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி் ஆவார்.
இந்த ஆண்டு 01.05.24 இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இட பெயர்ச்சி் ஆகிறார்.
இதையொட்டி நவக்கிரங்களில் குருபரிகார ஸ்தலமாக விளங்கும் வரலாற்று சிறப்பு மிக்க, திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன.
மேலும் கடந்த நான்கு நாட்களாக முதல் கட்ட லட்ச்சார்ச்சனை நடைப்பெற்றது. தொடர்ந்து குருப்பெயர்ச்சிக்கான சிறப்பு யாகம் துவங்கியது..
உற்சவரான குருபகவான் சன்னதியில் 108 கலசங்கள் வைக்கப்பட்டு பூர்வாங்க பூஜை, விக்னேஷ்வரபூஜை, வேதருத்ர மந்திரங்கள் ஓத முதல் கால யாகபூஜை நடைப்பெற்று பூர்ணாஹூதி, தீபாராதனைநடைப்பெற்றது.
இதைதொடர்ந்து இன்று 01.05.24 அதிகாலை இரண்டாம் கால யாக பூஜையும் , 108 கலசாபிஷேகம், தீபாரதனை நடைப்பெறு கின்றன.
தொடர்ந்து குருபகவான்பெயர்ச்சியாகும் மாலை 5.19 மணிக்கு குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகின்றன.
இந்துசமய அறநிலையதுறை நாகை மண்டல இணை ஆணையர் குமரேசன் தலைமையில்,ஆலய உதவி ஆணையர் சூரியநாராயணன் மேற்பார்வையில் ஆலயநிர்வாகம் சார்பில் பக்தர்கள் தடையின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவ்விழாவின் பாதுகாப்பிற்காக சுமார் 750 க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




















