வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இமசந்திரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச் சான்றிதழ்களை கால தாமதம் செய்யமல் உடனடியாக அவர்களுக்கு வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, ஜூலை 29-
தற்போது கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்துக் கொண்டுயிருக்கிறது. ஆதலால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வுச் செய்து மாணவர்களுக்குத் தேவையான சான்றிதழ்களை உடனடியக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ,மேலும் அனைத்து இ சேவை மையங்களிலும் மாணவர்கள் சான்றுகளைக் கூட்ட நெரிசல் இன்றிப் பெற்றுச் செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறு இன்றிச் சான்றிதழ்கள் வழங்கப் படவேண்டும்.
சான்றுகள் வழங்குவதில் தேவையற்ற கால தாமத்தினைத் தவிர்த்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப் பட வேண்டும் என வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர்களுக்கு உத்தரவிட்டு செய்தி வெளியிட்டுவுள்ளார்.



















