காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் திடீர் மழை பெய்தது. மழையின் காரணமாக ஓரளவு வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
காஞ்சிபுரம், செப்.5-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் காய்ந்து பொதுமக்கள் அவதி பட்டு வந்த நிலையில் இன்று மேக மூட்டம் ஏற்பட்டு திடிரென மழை பெய்தது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார் சத்தரம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
திடிரென பெய்த மழையின் காரணமாக வாகன ஓட்டிகள் சற்று அவதிப்பட்டாலும், மழை பெய்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் கன மழை
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னல்களுடன் கன மழை பெய்து வருகின்றது கிழக்குககடற்கரை சாலை, பூஞ்சேரி, கல்பாக்கம், புதுபட்டினம் ஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது.