மயிலாடுதுறை, பிப். 18 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திர சேகர் …

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அல் மத்ரஸா மன்பவுல் ஹஸனாத் அரபி பாடசாலையில் 30 ஆம் ஆண்டு விழா ஜாமி ஆ மஸ்ஜித் நாட்டாமை பஞ்சாயத்தார்கள் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நாட்டான்மை பஞ்சாயத்தார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மதரஸாவில் பயின்று வரும் மாணவ மாணவிகளின்  கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது சூராக்கள் பார்க்காமல் மனப்பாடம் செய்து ஓதி காண்பித்தனர். விழாவின் நிறைவாக பங்கேற்ற மாணவ மாணவிகள் அனைவருக்கும் ஜமாத்தார்கள் பரிசுகள் வழங்கினர்.

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அவ்விழாவில் மாணாக்கர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்று மேலும் விழாவினை சிறப்பித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here