கும்பகோணம், பிப். 21 –

கும்பகோணத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக  தஞ்சை சரக டிஐஜி கயல்விழி தெரிவித்தார்.

கும்பகோணத்தில்  மாநகராட்சிகள்,  பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்குப் பதிவு மையங்களில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தஞ்சை டிஐஜி கயல்விழி  வாக்குப்பதிவு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அரசு கலைக் கல்லூரி மற்றும் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தை  அவர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சை மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இத்துடன், ஆயுதப்படையினர், ஊர்க்காவல் படையினரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இது தவிர காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில், சிறப்பு தனிப்படை அமைத்து வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறவும், பிரச்சினைகள் ஏற்படாத வகையில் வாக்குப்பதிவு மையங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன. இதுவரை, எந்த ஒரு வாக்குப் பதிவு மையத்திலும் பிரச்சினைகள் ஏதும் ஏற்படவில்லை. ஒரு சில இடங்களில் வாய் தகராறு ஏற்பட்டது. அவை, காவல் துறையினர் மூலம் சரி செய்யப்பட்டது.

வாக்குப்பதிவு முடிந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்டிராங் ரூம்களில்’ மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

வாக்கு எண்ணும் மையங்களில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம்களுக்கு ஆயுதம் ஏந்திய காவல் துறையினர்  (நேற்று) முதல் 22-ம் தேதி வரை 3 சிப்ட் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் சுமார்  ஆயிரத்துக்கு மேற்பட்ட காவல் துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர்.

அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அனுமதியில்லாமல் யாரும் நுழையக்கூடாது” அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் 2 ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேப் போன்று திருவிடைமருதூர் பாபநாசம் பேரூராட்சியில் நடைபெற்ற வாக்கு இயந்திரங்கள் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் தலைமையில் ஆய்வாளர்கள் ஓம்பிரகாஷ் பேபி மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here