திருநின்றவூர், பிப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகரத்திற்கு அருகே உள்ள நத்தம் பேடு ஊராட்சிக்குட்பட்ட ஜியோனி நகர் என்ற இடத்தில், சி.எம்.டி.ஏ அங்கீகாரம் பெற்று வரையறுக்கப்பட்ட வீட்டுமனை பிரிவில், பல்வேறு அளவிலான வீட்டு மனைகளை வடிவமைத்து தனியார், அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் வீட்டுமனைகளை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆறு வருடங்களாக அங்கு வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு, மழைநீர் வடிகால்வாய் உள்ளிட்ட இதர எவ்வித அடிப்படை வசதிகளையும் அந்நிறுவனம் செய்து தரவிலையெனவும் மேலும் சி.எம்.டி.ஏ. விதிமுறைகளின் அடிப்படையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவக்கிய பின்பே மனைப்பிரிவு விற்பனை வரைப்பட மனைகளுக்கான ஒப்புதல் மற்றும் அனுமதியையும் வழங்க வேண்டிய நிலையில், உள்ளூர் நிர்வாகமான நகர மற்றும் ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் அதுக்குறித்து எவ்வித பார்வையிட்டு உறுதிப்படுத்திய பின்னரே அவ் வீட்டுமனைகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பது விதிமுறைகள் என்கிற போது, அவைகள் அனைத்தையும் பின்பற்றாமல் ஒப்புதல் மற்றும் அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக அக்குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அப்பகுதியில் அம்மனைகளை வாங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் அவ்விடத்தில் தங்கள் குடியிருப்பு கட்டடங்களை கட்டி வசித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அச்சூழ்நிலையில் அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், குறிப்பாக முறையான கழிவுநீர் கால்வாய் மற்றும் சாலை வசதிகள் இல்லாமல் பெரும் கடினமான நிலையில் தாங்கள் வசித்து வருவதாகவும் மேலும் அதனால் ஏற்படும் சரும மற்றும் உடல் ரீதியான பல்வேறு நோய்களை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எதிர் கொண்டு வருவதோடு அதனால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கிடையே முறையான கழிவுநீர் கால்வாய் இல்லாததால், பல்வேறு பிரச்சினைகள் எழுவதுடன் தங்களுக்குள் நல்வுறவு பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுவதாக மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் முறையான சாலை வசதிகள் இல்லாததால் மருத்துவ சிகிச்சைக்காக அப்பகுதிகளுக்கு அவசர வாகனங்கள் வர மறுப்பதும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் அப்பிரச்சினைகள் குறித்து பலமுறைகள் வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமான ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு வழங்கியதாக அக்குடியிருப்பு நலச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இதுவரை அம்மனுக்கள் மீதான எவ்வித நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்கவில்லை என மேலும் குற்றம் சாட்டுகின்றனர்.

அதனால் இப்பிரச்சினைக் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிடும் வகையில் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கின்றனர். மேலும் இப்பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளிக்கவுள்ளதாகவும் மேலும் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் முறையிட உள்ளதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

பேட்டி சுதா அப்பகுதி குடியிருப்புவாசி

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here