கும்பகோணம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் மாநகரில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன்சம்பத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் 29 வது ஆண்டு துவக்க விழா மற்றும் மாநில செயற்குகுழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் இந்து மக்கள் கட்சி சார்பில் அக் கட்சியின் 29 ஆம் ஆண்டு துவக்கவிழா மற்றும் செயற்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் வீரசைவ மடத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக அந்நிகழ்வில் குத்து விளக்கு ஏற்றி உயிர் இழந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் அந்த மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியான் நிறைவில் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் பத்திரிகையாளர் சந்தித்து தெரிவித்த போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியில், பாஜக., வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்வது, மீண்டும் மோடி, வேண்டும் மோடி என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவும், பாஜக தேர்தல் அறிக்கையில், தமிழகத்தை கொங்கு, தென் மாவட்ட மற்றும் ஏனைய மாவட்டங்களை கல்வி, வளர்ச்சி, பொருளதாரம், முன்னேற்றம் என்ற அடிப்படையில், மூன்று மாநிலங்களாக பிரித்து புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டும். எனவும், கட்ச தீவை மீட்க வேண்டும். கண்ணகி கோவிலில் தமிழக மக்களின் வழிபாட்டு முறையை நிலை நாட்ட வேண்டும், தமிழகத்தில் கோவில்கள் அரசு மற்றும் அரசியல்வாதிகள் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்த புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். அத்துடன் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் ஆலோசனை வழங்க உள்ளோம். என்ற அவர்.
எங்கள் அமைப்பு சார்பில் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம். தேர்தல் சீர்திருத்தங்கள், செலவினங்கள் மிஞ்சப் படுத்துவது போன்ற காரணங்களால் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்படுத்த வேண்டும். தேர்தல் நிதி திரட்டுவதற்கான, பத்திரங்கள் செல்லாது என நீதிமன்றங்கள் அறிவித்துள்ளது. பண பலத்தை கொண்டு தேர்தலை சந்தித்து, ஜனநாயகம் பணநாயகமாக மாறி வெற்றி பெறுவதற்கு அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். என்று தெரிவித்த சம்பத். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியே சென்று விட்டது. தமிழகத்தில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. என்றார்.
தற்போது திரவிடமா, தேசியமா எனவும், அண்ணாமலையை, இதர தலைவர்களாக என போட்டி நிலை உருவாகியுள்ளது. பாஜக, வெற்றி பெற கூடிய மிக பெரிய சூழல் தமிழகத்தில் உருவாகியுள்ளது. அரசியல் மாற்றம் நிகழ்ந்துக்கொண்டு இருக்கிறது.
ஹிந்து மக்கள் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. ஹிந்து மக்கள் கட்சி தேர்தலை சந்திக்கிறோமா இல்லையா என்பது இல்லை. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற வேண்டும். என்பதே எங்கள் நோக்கம் என்றார்.
மேலும் கும்பகோணத்தை தனி மாவட்டமாக தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதை போல பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களையும் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மிக பெரிய போராட்டம் நடத்தப்படும். ஹிந்து என்ற பெயர் இருப்பதால் தேர்தல் ஆணையத்தில், எங்கள் அமைப்பை கட்சியாக பதிவு செய்ய மறுக்கிறார்கள். முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள், ஒரு மதத்தின் பெயரில் கட்சி பதிவு செய்துள்ள சூழலில், ஹிந்து என்ற மதத்தின் பெயரில் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. எனவே அதற்காக சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். என்று தெரிவித்தார். தொடர்ந்து செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






















