தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019 (TNEA-2019 ) முழுமையான இணையவழி விண்ணப்ப பதிவாகவும் மற்றும் இணைய வழி கலந்தாய்வு சேர்க்கையாகவும் இருக்கும். விண்ணப்பத்திற்கான தகவல்களை பதிவுச் செய்தல் பதிவு செய்வதற்கான பணத்தைச் செலுத்துதல் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவைப் பதிவு செய்தல் தற்காலிக இட ஒதுக் கீட்டை ஏற்றல்  அல்லது நிராகரித்தல் முடிவு செய்யப் பட்ட இட ஒதுக்கீடு ஆணையை பெறுதல் ஆகிய அனைத்தும் இணைய வழி செயல் பாட்டால் மட்டுமே நடைப் பெறுகிறது. என ( TNDEA) தெரிவித்துள்ளது . மேலும் சான்றிதழ்களை சரிப்பார்த்தல்  மட்டுமே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்களில் ( TEC ) நடைப் பெறும் எனவும் தெரிவித்துள்ளது. இணைதள வசதி இல்லாதவர்கள் எல்லா சேவைகளுக்கும் மாவட்டந் தோறும் செயல்படும்  தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்களை  அணுகலாம் என்றும் அவர்களுக்கு தேவையான சேவைகள் அனைத்தும் கிடைக்க வசதி செய்யப் பட்டுள்ளது  என்றும் அவ் வறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

சேர்க்கை விண்ணப்பம் கடந்த 2 ஆம் தேதி இணைய தளங்களில் பதிவு செய்ய தொடங்கி எதிர் வரும்  மே 31  ஆம் தேதி முடிவடைகிறது. சம வாய்ப்பு எண் ஜூன் 3 ல் வெளியாகிறது, (assigning randam number) ஜூன் 6 ஆம் தேதி சான்றுயிதழ்கள் சரிப் பார்ப்பு அந்தந்த மாவட்ட சேவை மையங்களில் தொடங்கி 11 ஜூன் 2019 ல் முடிவடைகிறது. அதன் பின்பு தர வரிசை எண் ஜூன் 17 ல் வெளியிடப் படுகிறது. அடுத்து சில தினங்களில் அதாவது சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வில் ஜூன் 20 ல் மாற்றுத் திறனாளி களுக்கும், 21 ஜூனில் முன்னாள் இராணுவத் தினருக்கும், ஜூன் 22 ல் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வுகள் நடைப் பெறுகின்றன. அதன் பின்பு தொழிற் கல்வி பயின்றவர்களுக்கான கலந்தாய்வு ஜூன்25 தொடங்கி ஜூன் 28 வரை நடைப் பெறுகிறது . பொதுக் கலந்தாய்வு ஜூலை 3 ல் தொடங்கி  ஜூலை 28 வரை ஆன் லைனில் நடைப் பெறுகிறது. அதன் பின்பு துணைக் கலந்தாய்வு ஜூலை 29ல் நேரடியாக நடைப் பெறுகிறது. எஸ்.சி.ஏ. காலியிடங்கள். எஸ்.சி பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக ஜூலை 30ல் நடைப் பெறுகிறது. ஜூலை 30 தோடு கலந்தாய்வு நிறைவுப் பெறுகிறது. பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பச் சேர்க்கை என்பது முழுமையாக இணைய வழியில் நடைப் பெறுவதால் கவனத்துடனும் விரைவாகவும் செயல் பட முன் எச்சரிக்கையாக உங்களுக்கான பணிகளை எளிமையாக்கிக் கொண்டு கடைசி நேரத்தில் ஏற்படும் ஏமாற்றங்களை தவிர்த்திட உதவிடும் என்ற நோக்கத்துடனே இந்த விரிவான கட்டுரை..

 

முதலில் தேவையான ஆவணங்கள்:

மேலும் இணைய வழி கலந் தாய்வின் அடுத் தடுத்த கட்டங்கள் பின்வருமாறு  உள்ளது

  1. விண்ணப்பப் பதிவு
  2. சமவாய்ப்பு எண் உருவாக்குதல் ( randam number by TNEA Authority )
  3. பொறியியல் சேர்க்கை உதவி மையத்தில் சான்றிதழ் சரிப் பார்த்தல்
  4. தரவரிசை வெளியிடுதல் ( TNEA Authority )
  5. சேர்க்கைக்கான முன்பணம் செலுத்துதல்
  6. விருப்பமான கல்லூரியையும் மற்றும் பாடப் பிரிவையையும் பதிவு செய்தல்
  7. குறிப்பிட்ட நாளில் தற்காலிக இட ஒதுக்கீடு செய்தல் ( by TNEA Authority )
  8. இட ஒதுக்கீட்டை மாணவர் உறுதி செய்தல்
  9. இறுதி ஒதுக்கீடு செய்தல் (by TNEA Authority )
  10. ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர்தல்

 

என இப்படி பலதரப் பட்ட நிலைகளில் மாணவர்கள்  மேல் குறிப்பிட்டு உள்ள விவரங்களை கவனித்து அதற்கான உரிய காலக் கட்டத்தில் செயல் பட வேண்டும். மேலும் மாணவர்கள்  முதற் கட்டமாக இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவு  செய்யும் எளிய முறையில் செயலாற்றுவது எப்படி என தெரிந்துக் கொள்ள பின் வரும் வழிமுறைகள் படி செயலாற்றவும் .  முதலில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு முன்பு TNEA இணைய தளத்தில் உள் சென்று ( DATA SHEET) தகவல் அறிக்கை படிவத்தை பதிவிறக்கம் செய்து பின்பு அதனை முழுமையாக பூர்த்தி செய்து கொண்டால் தங்களுக்கு www.tneaonline.in ஆன் லைனில்  விண்ணப்பத்தை பதிவு செய்ய எளிதாயிருக்கும். குறிப்பாக மாவட்ட பொறியியல் உதவி மையத்திற்கு செல்பவர்கள் கண்டிப்பாக இதனை எடுத்துச் செல்வது நல்லது. ஆன் லைனில் பதிவு செய்யப் பட்ட பின்பு கடைசியாக தாங்கள் விண்ணப்பித்த படிவத்தை பதிவிறக்கம் செய்யும் போது அதனுடன் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான படிவங்களும் கொடுக்கப் பட்டிருக்கும்  அதனை அச் செடுத்துக் கொண்டு அச்செடுத்த படிவத்தில் உரிய இடத்தில் உங்கள் பாஸ் போர்ட் அளவிலான புகைப்படத்தை ஒட்டி படிவத்தில் குறிப்பிட்டுள்ள எல்லா சான்று யிதழ்களையும் அதனுடன் நகல்களையும் உங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள குறிப்பிட்ட நாளில்  மையத்தில் சரிப் பார்த்து சமர்பிக்க வேண்டும். இத்தோடு தாங்கள் முறையாக விண்ணப்பிக்க வேண்டிய அனைத்தும் நிறைவுப் பெறும்.

 

மாவட்ட உதவி மையங்கள் சென்று விண்ணப்ப பதிவு செய்யாதவர்கள் வீட்டிலிருந்த படியோ வேறு எங்கிருந்தும் பதிவு செய்ய பின் வரும் கணினியில் நீங்கள் செயல் பட உதவிடும் புகைப் படங்களை பார்த்து செயல் படுங்கள் வேலை நேரம் மிச்சமாகவும்,எளிதாகவும் இருக்கும்.

 

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here