கும்மிடிப்பூண்டி, ஏப். 08 –

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலக்கரி கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 250 லாரி உரிமையாளர்களிடம் இருந்து தின வாடகை அடிப்படையில் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

ஆனால் சில லாரி உரிமையாளர்கள் சட்டவிரோதமாக அரசு நிர்ணயம் செய்த எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதலாக நிலக்கரியை ஏற்றி வருவதால் சுமார் 180 க்கும் அதிகமான லாரி உரிமையாளர்கள் டீசல் விலை சதமடித்த நிலையில், அதனால் வருவாய் இழப்பின் காரணமாக  சாலை வரி, வாகன காப்பீடு கூட கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இப்படி பல்வேறு சிரமங்களுக்கிடையே தொழில் செய்து வரும் எங்களுக்கு மேலும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில், சட்ட விரோதமாக ஆந்திராவில் இருந்து அதிக எடை ஏற்றிவரும் லாரி உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் செயல்பாட்டினை அனுமதிக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் எச்சரித்து சென்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here