மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்துள்ள இராஜகோபாலபுரத்தில் ஸ்ரீ ஐயன்-பிடாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மேலும் இத் கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 24 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து ஐயன்-பிடாரியம்மன் வீதி உலா காட்சி, இளந்தேர் வீதி உலா காட்சி, நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது.
முன்னதாக திருத்தேர்கள் வீதி உலா காட்சி நடைபெற்றது தொடர்ந்து கங்கணம் கட்டி கொண்டு விரதமிருந்த பக்தர்கள் மெயின் ரோடு சாஸ்தா கோவிலில் இருந்து வான வேடிக்கைகள் முழங்க சுக்கு மாத்தடி ஏந்தி நடனமாடியவாறு கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த வட்ட வடிவிலான வினோத தீக்குண்டத்தில் குதித்து குதித்து இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்திய நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிடாரி அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.























