திருவாரூர், நவ. 24 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு மிகவும் தாமதமாக நடைப்பெற்று வரும் பணியினைக் கண்டு ஒப்பந்ததாரரிடம் கடிந்துக் கொண்டார். அரசு வழங்கிய பணி ஆணையில் குறிப்பிட்டுள்ள 18 மாதங்களில் முழுமையாக திட்ட பணியை முடிக்க அறிவுறுத்திருந்த நிலையில் 10 மாதங்களை கடந்தும் தற்போது வரை 27 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது எனத் தெரிய வருகிறது. அதன் காரணமாக சற்றுக் கடுமையான அமைச்சர் 50% பணிகளை கூட முடிக்காத ஒப்பந்தக்காரரை அழைத்து கண்டித்தார்.மேலும் அப்போது அமைச்சர் “உங்கள் வீடு இங்கே இருந்தால் இப்படி தான் செய்வீர்களாயென கேள்வியெழுப்பினார். 50 சதவீத பணிகளை கூட முடிக்காமல் இவ்வளவு நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்..? முதலமைச்சர் ஊரில் நடைப்பெற்று வரும் பணியினை முதலமைச்சரே நேரடியாக கவனித்துக் கொண்டிருக்கிறார். என அப்போது அவரிடம் அறிவுறுத்தினார்.
மேலும் இவ்வளவு தாமதப்படுத்துவது சரியல்ல.எனவும் இன்னும் எவ்வளவு காலத்துக்குள் பணிகளை முடிப்பீர்கள் என ஒரு மணி நேரத்திற்குள் தனக்கு அறிக்கை தர வேண்டும். என தெரிவித்தார்.
இதுபோல் மீண்டும் நடந்தால் எச்சரிக்கை விடப்பட மாட்டாது, குறித்த காலத்தில் பணிகளை முடிக்காவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அப்போது அமைச்சர் ஒப்பந்ததாரரை எச்சரித்து பணியினை விரைந்தும் தரமாகவும் செய்து முடிக்க அறிவுறுத்தினார்.
அவ்வாய்வின் போது, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் அமைச்சருடன் உடனிருந்தனர்.



















