காங்கிரஸ் தனது 8வது 38 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுவுள்ளது அதில் காங்கிரஸின் மூத்த தலைவரும் பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே கர்நாடக மாநிலத்தில்  உள்ள குல்பர்கா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் அறிவித்து வருகிறது. இதுவரை ஏழு கட்டமாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. 7-வது பட்டியலில் முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி, ராஜ்பப்பர் இடம்பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் 8-வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நள்ளிரவில் வெளியிட்டது. இதில் 38 தொகுதிக்கான வேட்பாளர்கள் இடம் பெற்று உள்ளனர்.

கர்நாடகா, மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே கர்நாடகா மாநிலம் குல்பர்கா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு தேர்தலில் அவர் 74 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இருந்தார்.

கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரிகளான வீரப்ப மொய்லி சித்பலாபூர் தொகுதியிலும், கே.எம். முனியப்பா கோலார் தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியான அசோக் சவான் நான்டட் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியான திக்விஜய்சிங் போபால் தொகுதியிலும், உத்தரகாண்ட் முன்னாள் முதல்-மந்திரியுமான ஹரீஷ் ராவத் நைனிடால் தொகுதியிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரி பி.சி. கந்தூரியின் மகன் மணிஷ் கந்தூரிக்கு கார்வல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில்தான் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார்.

ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளரான மீனாட்சி நடராஜன் மத்திய பிரதேச மாநிலம் மன்டெனர் தொகுதியிலும், முன்னாள் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா தொகுதியிலும் போட்டியிடுவார்கள். காங்கிரஸ் கட்சி இதுவரை 218 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here