செங்கல்பட்டு, மே. 15 –

செங்கல்பட்டு அருகே உள்ள பழவேலி எனும் பகுதியில் அடுத்தடுத்து 4-வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் உள்ள வளைவில் திரும்புவதற்காக வாகனங்கள் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது எம்சாண்ட் மணலை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்த லாரி முன்னாள் சென்ற வேன் மீது மோதியது. இதில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை வேன், முன்னாள் சென்ற அரசு பேருந்து மற்றும் கார் மீது மோதியது. இதில் வேனில் பெரம்பலூரில் இருந்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக சென்ற நோயாளி உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவ்விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்று விட்டார். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் இவ்விபத்துக் குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இவ்விபத்தின் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here