தஞ்சாவூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் நேரம் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் வாக்குச் சாவடிக்குள் யாரை, அனுமதிக்க வேண்டும் யாரை அனுமதிக்க கூடாது என்பதில் சரியாக இருக்க வேண்டும் என அப்போது அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தும் முறை குறித்து காணொளி காட்சி மூலம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் அவர்களுக்குள்ள குறைகளையும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார் அப்போது அவர்கள் வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர்கள் ஏஜென்ட் மாறி மாறி வருவதால் சலசலப்பு ஏற்படுகிறதெனவும், வாக்குப்பதிவு நேரம் முடிந்து பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவும் மேலும் வாக்கு பெட்டி எடுக்க காலதாமதமாக வருகின்றனர் என பயிற்சி வகுப்புக்கு வந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் கருத்துக்களை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையாக விடுத்தனர்.























