புதுச்சேரி, ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும், இதனால் இரு கட்சியின் வேட்பாளர்களையும் கைது செய்ய வலியுறுத்தி சுயேச்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும், இதனால் இரு கட்சியின் வேட்பாளர்களையும் கைது செய்ய வலியுறுத்தியும், தேர்தலை ரத்து செய்ய கோரியும், தேர்தல் துறையை கண்டித்து சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ ஒதியம்பட்டு நான்கு முனை சந்திப்பில் சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுப்பட்டார். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாளை காலை எட்டு மணி அளவில் புதுச்சேரி காந்தி சிலை அருகே போராட்டம் நடைபெறும் என்று சுயேட்சை வேட்பாளர் மாஸ்கோ அறிவித்திருக்கிறார்.
144 தடை மற்றும் போராட்டங்களில் ஈடுப்பட்ட கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ள நிலையில் சுயட்சை வேட்பாளர் தர்ணாவில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.




















