மணல்மேடு, மே. 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகேவுள்ள வில்லியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகாமையில் உள்ள மருந்து கடை ஒன்றின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவுள்ளனர். அது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்.

வில்லியநல்லூர் கிராமம். இங்கு செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகாமையில் மயிலாடுதுறை மூங்கில் தோட்டத்தில் வசிக்கும் சுந்தரமூர்த்தி மகன் விவேக் சங்கர் (வயது 32) என்பவர் அப்பகுதியில்  மருத்து கடையினைத் திறந்து கடந்த 4 – மாதங்களாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில் {ம்பவ நாளன்று அவரது கடையின் கதவை அதிகாலையில், மர்ம நபர்கள் உடைத்து கடையில் இருந்த லேப் – டாப், , விலையுயர்ந்த செல்போன். ரு 1500 ரொக்கம், , மற்றும் கடையில் இருந்த CCTV கேமரா ஆகியவற்றை கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.

சம்பவம் அறிந்து அங்கு வந்த கடை உரிமையாளர் விவேக் சங்கள் மணல்மேடு காவல் துறையில் புகார் அளித்ததின் பேரில், காவல் துறையினர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here