சென்னை, அக். 9 –

சென்னையில் நேற்று பல்வேறு திட்டப்பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் ஈடுப்பட்டு வருபவர்களிடம் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாதவாறும், பாதுகாப்புடன் பணியில் ஈடுப்படுமாறும் மேலும் பணியினை துரிதமாகவும் விரைவாகவும் முடித்திடுமாறும் அறிவுறுத்தினார்.

நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கீழ் ரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள், சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் ரூ. 389.42 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய சதுக்கத் திட்டப் பணிகள் மற்றும் கத்திப்பாரா நகர்புற சதுக்கப் பகுதியில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை பெரு நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும் மக்களின் பயண நேரத்தை குறைத்து பயணத்தை எளிமையாகவும் அதிநவீன வசதியாக அமைந்திடவும். மெட்ரோ இரயில் திட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசால் 2007 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதற்கட்ட கட்டுமானப் பணிகளை அப்போதைய துணை முதலமைச்சராக இருந்த இப்போதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ இயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான வழித்தடம் 45.8 கி.மீட்டர் கலங்கரைவிளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சலை வரையிலான வழித்தடம் 26.1 கி.மீ மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடம் 47.0 கி.மீட்டர் என மொத்தம் 118.9 கீ.மீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களை ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

மேலும், சென்னை சென்ட்ரல் இரயில்நிலையம் அருகே சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் நிதியுடன் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் ரூ. 389.42 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய சதுக்கத் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இத்திட்டத்தின் கீழ் வெளியூர் இரயில் , புறநகர் இரயில் பற்கும் இரயில் மெட்ரோ ரயில், மாநகரப் போக்குவரத்து மற்றும் இதரப் பொதுபோக்குவரத்துகளை ஒருங்கிணைத்தல், பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே 2 சுரங்க நடைப்பாதைகள் நிலத்தடி வாகன நிறுத்தங்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கட்டடம், அருகில் உள்ள ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொதுக்கூடம், சென்ட்ரல் புறநகர் இரயில் நிலையம், சென்ட்ரல் இரயில் நிலையம், இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றிற்கிடையே உள்ள பகுதியை உலகத் தரத்திற்கு இணையாக மேம் படுத்தும் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மத்திய சதுக்கத்தினை சிங்காரச் சென்னையின் மணிமகுடமாக விளங்கும் வகையில் நேர்த்தியாக பணிகளை குறித்த கலத்தில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

பின்னர் கத்திப்பார நகர்ப்புற சதுக்கப் பகுதிக்கு சென்று கத்திப்பாரா மேம்பாலத்தின் அடியில் உள்ள குளோவர் பகுதிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பில் பன்முகப் போக்குவரத்துகளை ஒருங்கிணைத்து பயணிகள் ஒரு போக்குவரத்திலிருந்து மற்றொறு போக்குவரத்திற்கு மாறிச் செல்வதற்கும் அப்பகுதியில் காத்திருக்கும் போது பயணிகளுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் ரூ. 14.50 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு அப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரும்படி அலுவலர்களை அறிவுறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் போரூர் இராமச்சந்திர மருத்துவமனை எதிரில் சென்னை மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீ.ஃ அமைக்கப்படு வரும் தெள்ளியகரம் மெட்ரோ நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் அங்கு அமைக்கப்பட்டு வரும் உயர்த்தபட்ட மெட்ரோ நிலையக் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கட்டுமானப் பணிகளை மேற் கொள்ளுமாறும் கட்டுமானப் பணிகளின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் ( முழு கூடுதல் பொறுப்பு ) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ், இயக்குநர்கள் டி.அர்ச்சுணன், ( திட்டங்கள் ) ராஜேஷ் சதுர்வேதி ( இயக்கம் மற்றும் பராமரிப்பு ) மற்றும் சென்னை மெட்ரோ இயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here