தேனி மாவட்டம் பெரியகுளம் மேரி மாதா கல்லூரியில் மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை தினம் கருத்தரங்கம் நடைப் பெற்றது.
தேனி; ஜூலை,
தேனி மாட்டம் பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் குடும்ப நலச் சங்கத்தின் சார்பாக உலக குடும்ப மக்கள் தொகை குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது இதில் பெரியகுளம் கோட்டாட்சியர் திருமதி பிரதீபா கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்பு கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்லூரியின் தாளாளர் ஜோபி அலெக்ஸ். திருமதி பூங்கோதை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி . தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் சாந்தி ராணி. பெரியகுளம் காச நோய் பிரிவு துணை இயக்குனர் முருகன் தேனி சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் மருத்துவம் ஊரக நலப் பணி இணை இயக்குனர் எம் சரஸ்வதி. தேனி மாவட்ட முதன்மை கல்வி பொறுப்பு அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெ.ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார் பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களை வரவழைத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப் பட்டது. இவ் விழாவில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.