தஞ்சாவூர், ஏப். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் கர்ப்பிணிகளுக்கான தாய்-சேய் நல சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தாய்-சேய் நல சிறப்பு பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணிகள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற உறுதிமொழி ஏற்போம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கர்ப்பிணிகள் அனைவருக்கும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குடைகள் வழங்கப்பட்டு, அந்த குடைகளை பிடித்தவாறு கர்ப்பிணிகள் கலந்து கொண்டு 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அந் நிகழ்வின் போது சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவகாமசுந்தரி சிறப்பு முகாமில் பங்கெடுத்த கர்ப்பிணிகளுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை அளித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here