தஞ்சாவூர், ஏப். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தமிழ்நாட்டை இந்தியாவோடு வைத்திருப்பதே நம்முடைய வரிக்காகவும், நமது வளத்துக்காக மட்டும்தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஹிமாயூன் கபீருக்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

அதில் சீமான் பங்கேற்று நாம்தமிழர் கட்சி வேட்பாளருக்கு மைக் சின்னத்திற்காக வாக்கு சேகரிப்பு பரப்புரை மேற்கொண்ட அவர் உரைநிகழ்த்தும் போது, இந்த தேர்தல் மற்றவர்களுக்கு எல்லாம் வழக்கமான தேர்தல். கூட்டம் எனவும், மேலும் அவர்கள் எல்லோரும் கூட்டமாக கூட்டணியை வைத்துக் கொண்டும், கட்டு கட்டாக பணத்தை வைத்துக் கொண்டும் தேர்தலை சந்திக்கின்றனர் என்றார்.

ஆனால் நாம் தமிழர் கட்சியோ உங்களிடம் வாக்கு கேட்டு நிற்கவில்லை. எனவும் நாட்டின் உரிமையை மீட்பதற்காகவே களத்தில் நிற்கிறோம் என்றவாறு குறிப்பிட்டார்.

இங்கு ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்கள் எல்லாம் எப்போதாவது நாடாளுமன்றத்தில் இழந்த உரிமைகளை மீட்பதற்காக பேசியதுண்டா எனக் கேள்வி எழுப்பிய அவர்,  இந்த நிலத்தை நஞ்சாக்கி மீத்தேன், ஈத்தேன் போன்ற திட்டங்களை எல்லாம் கொண்டு வந்ததையெல்லாம் பெருமையாக பேசியவர்கள்தான் எனத் தெரிவித்தார்.

காவிரி படுகையில் மீத்தேன் இருக்கிறது என்றால், கங்கை படுகையிலும் மீத்தேன் இருக்கிறது என்பதுதானே பொருள் அப்படியெனில் அதை ஏன் அங்கு எடுக்கவில்லை,. ஏன் என்றால் அவர்களுக்கு அவர்கள் நிலம் முக்கியம். அதனால்தான் அதை அவர்கள் தொடவில்லை என்றவாறு குறிப்பிட்டார்..

மேலும் இந்தியாவில் 81 சதவீதம் நிலக்கரி நமது மண்ணில்தான் உள்ளது. அதற்காக 65 ஆயிரம் ஏக்கர் வரை தோண்டிக் கொண்டு வருகிறார்கள் என பேசிய அவர் மேலும் தமிழகத்தை இந்தியாவில் வைத்திருப்பதே நம்முடைய வரிக்கும், வளத்திற்கும்தான் என்ற அவர் மேலும் இல்லையெனில் நம்மளை அவர்கள் மனிதர்களாக கூட கருத மாட்டார்கள் என குற்றம் சாட்டினார்.

நமது மண்ணில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, ஒரு ஆறுதல் வார்த்தையாவது சொன்னது உண்டா. தமிழகத்தில் மணல், மலை வளம் களவு போவதுப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப் படமாட்டார்கள். எனவும், மலையிலிருந்து ஆறு, ஆற்றிலிருந்து நீர், நீரிலிருந்து சோறு, சோற்றிலிருந்து என் வயிறு, வயிற்றிலிருந்து என் உயிர், இது எங்களது வாழ்க்கை. பண்பாடு என்று நாங்கள் பார்க்கின்றோம் என்றார். ஆனால் அவர்கள் அதையெல்லாம் பணமாக மட்டுமே பார்க்கிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சி செய்ததில், ஏதாவது ஒரு நல்லது செய்ததை சொல்லி வாக்கு கேட்கட்டும். பாஜகவில் யாராவது காரணத்தை சொல்லிவிட்டால் நான் தேர்தலில் இருந்து விலகி கொள்கிறேன். இந்திய நாட்டை பிச்சைக்கார நாடாக ஆக்கிவிட்டது பாஜக. வளர்ச்சி, வளர்ச்சி என்றார்கள் வளரும் நாடு பட்டியலில் இந்தியா பெயர் கூட இல்லை எனவும் தொழிற்சாலைகள் என துவங்கி தனிப்பெரும் முதலாளிகளின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாக கட்டமைத்து வருகிறார்கள். ஆனால் சாப்பாடு எங்கிருந்து வரும், இதை யோசித்து பார்க்க வேண்டும்.

சிற்றூர்களின் வளர்ச்சி இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை சமப்படுத்த முடியாது. நகரத்தில் வாழும் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் கிராமங்களில் இருந்துதான் வந்தாக வேண்டும். எனவே சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அங்கு அவர்களுக்கு தேவையான கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும்.

நிலமும், வளமும் காக்கும் வகையில் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். வேளாண்மை என்பது தொழில் அல்ல.அது வாழ்க்கை முறை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

காவிரி நம் உரிமை, கர்நாடகத்துக்கு மட்டுமே சொந்தமல்ல, நம்முடைய வளம் நமக்கே என்றால் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு எப்படி இருக்கும்.

காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு தர முடியாது என கர்நாடகாவில் முதல்வரும், துணை முதல்வரும் தெரிவிக்கின்றனர். அங்கு சென்று வாக்கு கேட்டவர்தான் முதல்வர் ஸ்டாலின். மானமுள்ள தலைவனாக இருந்தால், ஒரு சொட்டு தண்ணீர் தராத உனக்கு சீட்டும் இல்லை, உன்னுடன் கூட்டும் இல்லை என கூறியிருக்க வேண்டும்.

அவர்களை வீழ்த்தினால்தான், தோல்வியை பற்றி சிந்திப்பார்கள். மீனவர்கள் பிரச்சினை, மீத்தேன் திட்டம், முல்லைப் பெரியாறு பிரச்சினை போன்ற காரணங்களால் தோற்கடித்தார்கள் தமிழர்கள் என சிந்திப்பார்கள். எங்களின் உரிமைக்கும், உணர்வுகளுக்கும் துணை நிற்காத உங்களுக்கு எங்களது வாக்கு இல்லை என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here