கும்பகோணம், அக். 9 –
நவக்கிரக ஸ்தலங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்கும், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழக அரசு, விரைந்து கும்பாபிஷேகம் நடத்திட வேண்டி அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர், இன்று, திருக்கோயில் முன்பு, கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் அகில பாரத இந்து மகாசபா மாநிலச் செயலாளர் இராம . நிரஞ்சன் கூறும் போது விரைந்து கும்பாபிஷேகம் நடத்தாவிட்டால், அனைத்து இந்து அமைப்பினரும் இணந்து மாபெரும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
நவக்கிரக ஸ்தலங்களில், இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்குவது, கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம், நாகநாதசுவாமி திருக்கோயில், இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திட திட்டமிட்டு, பாலாலயம் செய்விக்கப்பட்டு, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடத்திட உத்தேசிக்கப்பட்ட நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் இசைவு கிடைக்காததால், கும்பாபிஷேக தேதி முடிவு செய்ய முடியாமல், கிடப்பில் போடப்பட்டுள்ளது,
இதனை கண்டித்து இன்று இத் திருக்கோயில் முன்பு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட அகில பாரத இந்து மகா சபாவினர் முடிவு செய்திருந்தனர், இதற்கிடையில், போலீசாரின் வேண்டுகோளுக்கு இணங்க, இதனை கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றி அமைத்து, திருக்கோயில் முன்பு, மாநில செயலாளர் இராம நிரஞ்சன் தலைமையில், அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர், இந்து சமய அறநிலையத்துறை கும்பாபிஷேக தேதியை விரைந்து முடிவு செய்து அறிவிக்கவும், கோயிலுக்கு விரைந்து கும்பாபிஷேகம் நடத்திட வலியுறுத்தியும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இது குறித்து தமிழக அரசு விரைந்து முடிவு செய்து அறிவிக்காவிட்டால், அனைத்து இந்து இயக்கங்களுடன் இத்திருக்கோயில் முன்பு திரண்டு, மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.