கும்பகோணம், மார்ச். 16 –

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு மருத்துவமனை அருகில் கடந்த சில மாதங்களாக இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் வந்துள்ளது.

இதன் பேரில் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா காந்தபுனேனி உத்தரவின் பேரில் கும்பகோணம் உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன் மற்றும் கும்பகோணம் கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில், கும்பகோணம் தனிப்படை உதவி ஆய்வாளர் Tr.கீர்த்திவாசன். SSi ராஜா Hc சுரேஷ் பார்த்திபன், பாலசுப்ரமணியன், நாடிமுத்து, ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படை தொடர்ந்து அரசு மருத்துவமனை பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த்து.

அப்போது கடந்த 14.03.2022 ஆம் தேதியன்று சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் மயிலாடுதுறை, மணல்மேடு, உடையூர் பகுதியில் வசிக்கும் சிவாஜி என்பவரின் மகன் எஸ்.சந்தோஷ் வயது 19, மயிலாடுதுறை, மணல்மேடு, திருப்பங்கூர், நரிமுடுக்கு பகுதியில் வசிக்கும் குபேந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன் வயது 21, மற்றும்  அதேப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் ராகுல் வயது 20 எனத் தெரிய வந்தது. பின் அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று மேலும் விசாரணைக்கு பின் அவர்கள் ஏற்கனவே திருடிய 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி மூன்று நபர்களையும் தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here