சென்னை, அக். 11 –
நாளை நடைப்பெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு காணொலி மூலம் அறிவுறுத்தல் கூட்டம் தேர்தல் ஆணையர் முனைவர் வெ. பழனிகுமார் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள், வாக்கு எண்ணிக்கையின் முடிவினை உடனுக்குடன் தெரிவித்து கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது, கோவிட் – 19 நெறிமுறைகள் கடைப்பிடிப்பது குறித்து தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
இக் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எ.சுந்தரவல்லி, கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜி.வெங்கட்ராமன், காவல் உதவி தலைவர் ( தலைமையிடம் ) முனைவர் எம். துரை மற்றும் ஆணையத்தின் உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.