வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றன.
இந்த தொடரில் முதல் மூன்று போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி இரண்டு போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆல்ரவுண்டர் அந்த்ரே ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார். முழங்கால் காயம் காரணமாக பந்து வீசமாட்டார். பேட்டிங் மட்டுமே செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி இரண்டு போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஜேசன் ஹோல்டர், 2. ஃபேபியன் ஆலன், 3. தேவேந்த்ர பிஷூ, 4. டேரன் பிராவோ, 5. கிறிஸ் கெய்ல், 6. ஷிம்ரோன் ஹெட்மையர், 7. ஷாய் ஹோப், 8. எவின் லெவிஸ், 9. அஷ்லே நர்ஸ், 10. கீமோ பால், 11. நிக்கோலஸ் பூரன், 12. ரோவ்மன் பொவேல், 13. அந்த்ரே ரஸல், 14. ஒஷானே தாமஸ்.’