தஞ்சாவூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூரில் தமிழர் தேசிய முன்னணி தலைமை செயற்குழு கூட்டம் தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவருமான பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, அதில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாசிச பாஜக வெற்றி பெற்று விடுமானால் எதிர்காலத்தில் ஜனநாயகமே நம்முடைய நாட்டில் நிலவாது எனவும், பாசிச சர்வாதிகார, இந்துத்துவா ஆட்சி நிலை நிறுத்தப்படும், மதச் சிறுபான்மையினர் மற்றும் உள்ள பொது சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவார்கள், சமஸ்கிருத மொழியும், பண்பாடும், திணிக்கப்படும், மனித உரிமைகள் துச்சமாக மதிக்கப்பட்டு தூக்கி எறியப்படும், ஒட்டுமொத்தமாக நாட்டின் ஜனநாயகத்திற்கு பேரிடக் கூடிய பேர் அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு பாஜக கூட்டணி அடியோடு முறியடிக்கப்பட வேண்டும், அதற்குரிய வலிமையும், தற்போதைய சூழ்நிலையும் இந்தியா கூட்டணி தவிர வேறு எந்த அணிக்கும் இல்லை என்பது அப்பட்டமான உண்மை ஆகும்,
எனவே அக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்குமாறு மக்களுக்கு தமிழர் தேசிய முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வாசிக்கப்பட்டது, இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் முத்தமிழ் மணி, பொதுச் செயலாளர்கள் தமிழ்மணி, பசுமலை, துணை தலைவர்கள் முருகேசன், பானுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்





















