சென்னை, அக். 13 –

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம் சார்பில் விவசாயிகள், பத்திரைகையாளர்கள் உ.பி மாநிலத்தில் படுகொலை செய்தது குறித்து கண்டனம் மற்றும் கருத்தரங்கம் அதன் மாநிலத்தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தலைமையில் நடைப்பெற்றது.

கடந்த அக் 10 ஆம் தேதி எஸ்.பி.ஐ காலனி 3வது தெரு, சாலிகிராமத்தில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் தலைமை அலுவலகத்தில் ஞாயிறு மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த கண்டனம் மற்றும் கருந்தரங்க நிகழ்ச்சியிற்கு புதுடில்லி தேசியக்குழு உறுப்பினர் கழுகு கே. ராஜேந்திரன், போலீஸ் ப ப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநிலத் தலைவர் டாக்டர் லயன் எல்.பரமேஷ்வரன், டி.யூ.ஜே. தென் சென்னை மாவட்ட தலைவர் மற்றும் போரூர் மக்கள் நல்வாழ்வு சங்கம் போரூர் ஜனார்தனம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வரவேற்புரையை தென்சென்னை மாவட்ட டி.யூ.ஜே தலைவர் ரிப்போர்டர் பைல் ஏ.லட்சுமணன் நிகழ்த்தினார். மேலும் இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் கருத்துரையாளர்களாகவும் நீதியின் குரல் நிறுவனர் முனைவர் சி.ஆர்.பாஸ்கரன், விவசாயிகள் சட்ட இயக்கம் தலைவர் எஸ்.கே.ஜி. கிரிதரன், மதிமுக தேர்தல் பணி செயலாளர் இரா. அந்திரி தாஸ் ,தமிழக அரசு பாரதி விருது பெற்ற பாரதி சுகுமாரன், புதுச்சேரி பத்திரிகையாளர் யூனியன் மாநிலத் தலைவர் எம்.பி. மதிமகாராஜா, மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தலைவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துக் கொண்டு இக்கூட்டத்தில் உ.பி.மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் நடந்த விவசாயிகள், பத்திரிகையாளர்கள் உள்ளடங்கிய 8 பேரின் படுகொலை கண்டித்தும் அதன் மீது துரித நடவடிக்கைகள் மற்றும்  விரைவாக செயல்படத்தவறியதை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் குரல் எழுப்பினர்.

மேலும் தொடர் நிகழ்வுகளாக பத்திரிகையாளர் செய்தி சேகரிக்கும் களத்தில் தாக்கப்படுவதும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாய் இருப்பதையும் வன்மையாக கண்டித்து கருத்துக்களை எடுத்துரைத்தனர். தொடர்ந்து பேசியவர்கள் பத்திரிகையாளர்கள் கருத்து சுதந்திரத்தை அரசு ஒடுக்கி வருவதாகவும் குற்றம் சாட்டினர். பத்திரிகையாளர்கள் சுதந்திரத்தை ஒடுக்குவது என்பது சாதரணமாக கடந்து செல்லும் ஒரு நிகழ்வாக கருதக் கூடாது. அது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாக கருதி அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கங்களும் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி குரல் எழுப்ப வேண்டும் என பேசினர்.

நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் ஆலோசகர் எம்.டி.இராமலிங்கம் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஐ.கேசவன், போரூர் பி.பார்த்திபன், ராஜ் டிஜிடல் எஸ்.யுவராஜ், பி.கௌரி, மீசை ஏழுமலை, கே.அருண் ஆகியோர் ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here