திருவாரூர், ஏப். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியின் வேட்பாளர் டாக்டர் சுஜித் சங்கருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலை கிராமத்தில் அதிகாலை 7 மணிக்கே தேர்தல் களத்தில் இறங்கி தனது பிரச்சாரத்தை முன்னாள் உணவுத்துறை அமைச்சர் இரா. காமராஜ் துவக்கி வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து திருவாரூர் ஒன்றிய பகுதிகளான விளமல் கீழக்காவாது குடி, பழைய வலம், வைப்பூர், நடப்பூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட திருவாரூர் ஒன்றிய பகுதிகளில் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வில் தண்டலை ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், அதிமுக திருவாரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் PKU. மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்வேலன், நகரச் செயலாளர் R.D.மூர்த்தி, தண்டலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலெட்சுமி செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் என திரளானவர்கள் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here