திருவண்ணாமலை, மார்ச்.20-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.புருசோத்தமன், மாவட்ட துணைத்தலைவர்கள் டாக்டர் கே.மணி, என்.சின்னத்துரை, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி வினோதினி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகிக்க நகர தலைவர் என்.வெற்றிச்செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், திருவள்ளுவர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கே. ஜெயக்குமார் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்னைக்கு வந்தபோது சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் மூன்று முக்கியமான விஷயங்களை தொண்டர்களுக்கு தெரிவித்ததார். அதில் காங்கிரஸ்-திமுக உடனான இணைப்பு மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும், இரு கட்சிகளின் இணைப்பில் திமுக கட்சி பலமுள்ள கட்சியாக இருந்தால் மட்டும் போதாது என்றும் காங்கிரஸ் கட்சியையும் பலமிக்க கட்சியாக மாற்ற வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
மேலும் காங்கிரஸ்-திமுக உடனான கூட்டணியில் எந்த நிலைப்பாடாக இருந்தாலும் காங்கிரஸ்-திமுக. நட்புறவு தொடரும்.மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தலைவர் மற்றும் துணை தலைவர் இடங்களில் திமுகவை சேர்ந்த பிரதிநிதிகளே வெற்றி பெற்றுள்ளனர். இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலையிட்டு அறிக்கையின் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் ராஜினாமா செய்து உடனடியாக என்னை சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது என்பது இதுவரை எந்த ஒரு தலைவரும் இதுபோன்ற கட்டுப்பாடான கட்டளைகளை விதித்ததாக வரலாறு இல்லை. அதிமுக, பாஜகவிற்கு பட்ஜெட் குறித்து எதுவும் தெரியாது. பாஜகவில் உள்ளவர்கள் அனைவரும் அடி முட்டாள்கள். அவர்களுக்கு பட்ஜெட் குறித்து எதுவும் தெரியாது. பட்ஜெட் குறித்து பேச பாஜகவுக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை மேலும் நிதி துறை குறித்து ஒன்றும் தெரியாத நபர் தான் மத்தியில் நிதித்துறை அமைச்சராக உள்ளார். இது மிகப்பெரிய அசிங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கேவலமான பட்ஜெட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. அவர்கள் மற்ற மாநிலங்களின் பட்ஜெட்டை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது? கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பற்றாக்குறை குறைவாக உள்ள பட்ஜெட்டாக தமிழக பட்ஜெட் உள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமியோ, மற்றவரோ பேச எந்த ஒரு அருகதையும் இல்லை.இது ஒரு ஒப்பற்ற பட்ஜெட். சிறப்பான பட்ஜெட்டை நிதியமைச்சர் தயாரித்தது உள்ளார்.இதுபோன்ற பட்ஜெட்டை வருகின்ற நிதி அமைச்சர்களால் செய்ய முடியுமா என்று எண்ணி பார்க்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி பட்ஜெட் குறித்து பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன், ஐந்து மாநில தோல்வியில் எங்கள் மீதும் தவறு உள்ளது.உத்தரப்பிரதேச முதலமைச்சர் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் அதற்கான பயன் தேர்தலுக்கு பின்பு தெரியும் என மிரட்டல் தோணியில் பேசி உள்ளார். யோகி ஆதித்யநாத் ஒரு குண்டர். அவர் ஒரு ரவுடி. முதல்வராக இருப்பதற்கே லாயக்கற்ற மனிதராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.பாரதிய ஜனதா கட்சி மிரட்ட வேண்டிய இடத்தில் மிரட்டியும், காலில் விழு வேண்டிய இடத்தில் காலில் விழுந்தும் வாக்குகளை பெற்று உள்ளனர். 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கட்சியின் குறைகளை எடுத்துக் கொண்டு விரைவில் அதை நிவர்த்தி செய்வோம்.காங்கிரஸ் கொள்கைகள் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து வருகின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல தலைவர் கே.சக்திவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.கே.காமராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கே.மோகன், மாவட்ட துணைத் தலைவர் அண்ணாச்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.அண்ணாமலை நன்றி கூறினார்.




















